மெஸ்ஸியின் அர்ஜென்டினா, ரொனால்டோவின் போர்த்துக்கல் அணிகள் நட்பு கால்பந்து போட்டியில் தோல்வியடைந்துள்ளன.
சீனாவில் உள்ள பீஜிங்கில் நடந்த சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் மோதின.
இதன் முதல் பாதியில் 28வது நிமிடத்தில் பிரேசில் அணியின் தியாகோ டார்டெலி ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய தியாகோ மீண்டும் (64வது நிமிடம்) ஒரு கோல் அடித்து பிரேசில் அணியை வலுப்படுத்தினார்.
‘பெனால்டி’ வாய்ப்பை நட்சத்திர வீரர் மெஸ்ஸி வீணடித்தார். இதன் பலனாக அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
மற்றொரு நட்பு போட்டியில் போர்த்துக்கல் அணி, பிரான்ஸை சந்தித்தது. பிரான்ஸ் அணிக்கு கரீம் பென்சிமா (3வது நிமிடம்), பால் போக்பா (69) தலா ஒரு கோல் அடித்தனர்.
51வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கடைசியில், போர்த்துக்கல் அணிக்கு ரிக்கார்டோ (77) ஒரு கோல் அடித்தார். முடிவில், போர்த்துக்கல் அணி 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
0 comments:
Post a Comment