↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பெங்களூர் மத்திய சிறை வளாகத்தின் வெளியே மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம். அவருடன் அமைச்சர்களும் ஜெயலலிதா வருகைக்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வந்த பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குழு, காலை 11 மணிக்கெல்லாம் மத்திய சிறை வளாகத்திற்கு வந்தனர். அப்போதுதான் ஜாமீன் நடைமுறைகள் சிறப்பு கோர்ட்டில் நடக்க தொடங்கியது. 2 மணிக்குதான் ஜாமீன் நடைமுறை முடிந்து ஆர்டர் காப்பி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயினும் சிறைக்கு வெளியே பன்னீர்செல்வம் டீம் காத்திருந்தது.
மதியம் 1.30 மணி முதல் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது. மழைக்காக, அருகருகே உள்ள கட்டிடங்களில் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஒதுங்கிக் கொண்டனர். பன்னீர்செல்வம் முதல்வர் என்பதால் அவரது பாதுகாப்புக்காக போலீஸ் பஸ்சில் அவரை ஏற்றிக்கொண்டனர் பெங்களூர் போலீசார். மதியம் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்த பன்னீர்செல்வத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வற்புறுத்தி சாப்பிடுமாறு வலியுறுத்தினர். போலீசார் தங்களுக்கு வாங்கி வந்த சாப்பாட்டை பன்னீர்செல்வத்துக்கு பகிர்ந்தளித்ததாக தகவல் கிடைத்துள்ளது. பன்னீர்செல்வம் இன்னும் ஷேவ் செய்யாமல் தாடியுடனே அம்மாவை வரவேற்க வந்திருந்தார்.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
»
ops
» தாடியுடன், சாப்பிடாமல், கொட்டும் மழையில் சிறைக்கு வெளியே காத்துகிடக்கும் தமிழக முதல்வர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment