↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய், சமந்தா நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள 'கத்தி' படத்திற்கு எதிராக தமிழ் அமைப்பினர் சிலகாலம் போராடி வந்தனர். பின்னர் அவர்களுடைய போராட்டம் என்ன காரணத்தினாலோ திடீரென நின்றுபோனது. தற்போது கத்தி படம் எவ்வித பிரச்சனையும் இன்றி வெளிவரும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கத்தி படத்தின் தயாரிப்பாளரை எதிர்த்து விஜய் ரசிகர்களே குரல் கொடுக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

விஜய்யின் கத்தி திரைப்படம் திரையில் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இன்னும் படத்தின் டிரைலரை வெளியிடவில்லை. டிரைலர் தயாராக இருக்கின்ற போதும் அதனை வெளியிட தயாரிப்பு தரப்பு முருகதாஸுக்கு தடை விதித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான டீஸர், மிகவும் சுமாராக இருந்ததாக சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் விமர்சிக்கப்பட்டது. விஜய்யையும், முருகதாஸையும் பலர் கலாய்த்து கமெண்ட் போட்டனர். அந்த நேரத்தில் 'ஐ' படத்தின் டீஸர் வெளிவந்ததால், 'ஐ' டீஸரையும், 'கத்தி' டீஸரையும் ஒப்பிட்டு கத்தி படத்தின் டீஸரை மிகவும் தரக்குறைவாக பலர் விமர்சித்தனர்.

படத்தின் வியாபாரம் தற்போது பிரமாண்ட அளவில் நடைபெற்று வரும் நிலையில் டிரைலரை வெளியிட்டு, அந்த டிரைலர் நெகட்டிவ் ரிசல்ட்டை தந்தால், படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு வரும் என்று கருதிய தயாரிப்பாளர், முருகதாஸிடம் கத்தி படத்தின் டீஸை அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட ஒப்புதல் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. கத்தி படத்தின் டிரைலர் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் படத்தயாரிப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top