சுருதிஹாசன் நடிப்பு, பாடல், நடனம், இசை என ஆல்ரவுண்டராக இருக்கிறார். சிறந்த நடிகை என பெயர் வாங்கியுள்ளார்.
நிறைய படங்களில் பாடல்களும் பாடி இருக்கிறார். இசையிலும் கலக்குகிறார்.
இவற்றில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று சுருதிஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
இதுதான் பிடிக்கும் என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. சிறுவயதில் எனக்கு பிடித்தமானவை எல்லாவற்றையும் கற்றேன். என் தந்தை கமல் என்னிடம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார். அதாவது இப்போது நீ கொடுக்கும் உழைப்பு வருங்காலத்தில் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உபயோகப்படும் என்றார். அவர் கூறிய அறிவுரை இன்று பலித்து விட்டது.
நான் கற்றவை சினிமாவில் இப்போது பிரதிபலிக்கிறது. அமெரிக்கா சென்று இசை பயின்றபோது சினிமாவில் அது பயன்படும் என்று நினைக்கவில்லை.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
0 comments:
Post a Comment