↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பொதுவாக இளையதளபதி விஜய் படங்களுக்கு தமிழகத்தைபோலவே வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அதுவும் அதுநுட்ப தொழில்நுட்பத்தில் விஜய் படம் வெளியானால் வரவேற்பு பலமடங்கு இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்.
இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட IMAX என்ற தொழில்நுட்ப வசதியில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் ஒருசில நாடுகளில் வெளியாக இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. நெதர்லாந்து நாட்டில் உள்ள தியேட்டர்களில் விஜய்யின் கத்தி IMAX தொழில்நுட்பத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது.
மேலும் லைகா நிறுவனத்தினர்கள் பல நாடுகளில் தங்கள் வியாபாரத்தொடர்பை வைத்திருப்பதால் அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் IMAX தொழில்நுட்பத்தில் கத்தி படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
லைகாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட் IMAX தொழில்நுட்ப வசதி தியேட்டர் உரிமையாளர்கள் கத்தியை தங்கள் தியேட்டர்களில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இன்று அல்லது நாளைக்குள் இந்த தொழில்நுட்பத்தில் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற தகவல் வெளிவந்துவிடும். IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் கத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சென்னையிலும், இந்தியாவில் உள்ள பல நகரங்களிலும் IMAX தொழில்நுட்ப வசதியுள்ள தியேட்டர்கள் இல்லாத காரணத்தினால் கத்தி திரைப்படம் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை திரையில் பார்த்தால் படம் மிக துல்லியமாகவும், அதிக சவுண்ட் எஃபெக்ட்டிலும், முப்பரிமாண வடிவத்திலும், ஹை ரெஸலூசனிலும் தெரியும். இந்த தொழில்நுட்ப வசதிகள் உள்ள தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது நமது துரதிஷ்டம். ஆனால் மும்பை, பெங்களூர் ,ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் IMAX தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தியேட்டர்கள் இருக்கின்றது. ஆனாலும் அந்த தியேட்டர்களில் ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
cinema
»
cinema.tamil
»
kaththi
»
vijay
» வெளிநாட்டில் மட்டுமே 'கத்தி' ரிலீஸ். தமிழக விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment