↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
குஜராத்தில், ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காதலன் இணையத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சியடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். குஜராத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் 16 வயது மகள், டியூசன் சென்டரில் சந்தித்த மாணவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர்.
அப்போது விதவிதமாக நிறைய புகைப்படங்களை அவர்கள் எடுத்துள்ளனர். தனது காதலன் மீது உயிராக இருந்துள்ளார் இந்த மாணவி. தனது நகைகளையெல்லாம் விற்று காதலனுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்துள்ளாராம். இந்நிலையில், சமீபகாலமாக தனது காதலரின் போக்கு சரியில்லை என சந்தேகித்துள்ளார் அம்மாணவி. வேறு பெண்ணுடன் காதலனுக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சந்தேகித்துள்ளார். கடந்த 5ம் தேதி மதியம் தனது காதலனைச் சந்திக்க சென்றுள்ளார் மாணவி. சிறிது நேரத்தில் மாணவி சபர்மதி ஆற்றில் குதித்து விட்டதாக அவரது காதலர், மாணவியின் தங்கைக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது.
மாணவி தற்கொலை செய்து கொண்ட சில நாட்கள் கழித்து அவரது டைரி ஒன்றைக் கைப்பற்றியுள்ளார் அவரது தந்தை. அதில், மாணவி பல சமூகவலைதளப் பக்கங்களின் முகவரிகளையும், அவற்றின் பாஸ்வேர்டுகளையும் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், ஒரு சமூகவலைதளப் பக்கத்தில் மாணவி, அவரது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார் அவரது தந்தை ரஸ்ஸாக் சிப்பா. அவையனைத்தும் மாணவியின் காதலரால் பதிவேற்றம் செய்யப்பட்டவை என்றும், அதனால் தான் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். ஆனால், அப்புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வெறுமனே தற்கொலை என்று மட்டும் வழக்குப் போட்டு விட்டு அமைதி காக்கிறதாம் போலீஸ். எனவே, இது தொடர்பாக மேல்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித்து வருகிறார் அம்மாணவியின் தந்தை.
இதற்கிடையே, இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வசவா கூறுகையில், ‘அம்மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகவும், அதற்குப் பின்னரே இது குறித்து தெளிவான விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை மாணவியின் தந்தை தன்னை சந்தித்து புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மோடியின் பாஜக ஆட்சி நடத்தி வரும் குஜராத்தில் இதுவரை இந்த தந்தையின் கோரிக்கைக் குரலுக்கு விமோச்சனம் கிடைக்கவில்லை.
Home
»
news
»
news.india
» படங்களை வெளியிட்டு களங்கப்படுத்திய காதலன்.. ஆற்றில் குதித்து காதலி தற்கொலை
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.