சென்னை:ஒரு படத்தில் நடித்து முடித்து அந்தப்படம் வெளியான பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்பதை ஏறக்குறைய எல்லா ஹீரோக்களும் பின்பற்றி வருகின்றனர். நேற்று ஹீரோவான சிவகார்த்திகேயன் போன்றவர்களே இதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்த சிஸ்டத்தை பல வருடங்களாக பின் பற்றி வந்த கமலோ, தற்போது அதை மீறிவிட்டார். விஸ்வரூபம் 2 படத்தில் நடித்து முடித்த கமல், அந்தப் படத்தை வெளியிட தயாரிப்பாளர் தயாராக இல்லை என்று தெரிந்ததும், உத்தமவில்லன் படத்தில் நடிக்கப்போனார்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு முன்னதாக உத்தம வில்லன் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்ட கமல், படத்தின் வேலைகளை பரபரவென முடிக்க வைத்தார். படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் துரிதப்படுத்தி இப்போது அதன் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முதலில் அக்டோபர் 2 ஆம் தேதி, அதாவது காந்தி ஜெயந்தியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். பிறகு அந்த திட்டத்தை மாற்றி, கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி உத்தம வில்லனை ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? நவம்பர் 7-ஆம் தேதியும் உத்தம் வில்லன் ரிலீசாகாது என்கிறார்கள்.! பொங்கல் அன்று உத்தம வில்லனை வெளியிட இருக்கிறார்களாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆம்பள, விஜய்சேதுபதி, ஆர்யா நடிக்கும் புறம்போக்கு ஆகிய படங்களும் பொங்கல் ரிலீசாக திரைக்கு வர இருக்கின்றன. பொங்கலுக்கு நிறைய படங்கள் வருவதால் ஒருவேளை தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் உத்தமவில்லன் பிப்ரவரிக்கு தள்ளிப்போகலாம்.
0 comments:
Post a Comment