அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் தல 55 படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமேக்ஸிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறது கௌதம் மேனனின் டீம்.
இப்படத்தின் ஹீரோ 28 வயதிலிருந்து 38 வயது வரைக்கும் 10 வருட காலகட்டத்திற்கு பயணிப்பதுபோல் கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம்.
இந்தக் கதையை அஜித்திடம் சொன்னபோது அவர் வேறு எந்தவிதமான மாற்றத்தையும் சொல்லவே இல்லையாம். அவராகவே முன்வந்து ஜிம்மிற்கு சென்று உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக வந்தாராம்.
ஒரு கெட்அப்பிற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாவது நரைத்த தலைமுடி தேவைப்பட்டதால் தன் நிஜமான தோற்றத்தை அப்படியே பயன்படுத்திக் கொள்ளச் சொன்னாராம்.
ப்ளாஷ்பேக்கில் கரு கரு தலைமுடியோடு ஒரு கெட்டப்பும், தாடி, மீசையுடன் இன்னொரு கெட்அப்பும் தேவைப்பட்டிருக்கிறது. இந்த கெட்அப்புக்களுக்காக டை அடித்து தலைமுடியை கருப்பாக்கிக் கொண்டு வந்தாராம் அஜித்.
தல 55 படத்தின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தீபாவளிக்கு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் டிசம்பரிலேயே படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.
பிறகு என்ன நினைத்தார்களோ 2015 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி அதிலும் மாற்றம் இருக்கும் போல் தோன்றுகிறது.
இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் ஜனவரி 10-ம் திகதி வெளியானது. அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதே சென்டிமென்ட்டை வைத்து, தற்போது கௌதம் மேனன் படத்தையும் பொங்கலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 9-ம் திகதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதாம். இதற்கு அஜித் தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டதாக கேள்வி.
0 comments:
Post a Comment