↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்துக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன தமிழ் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஈழத் தமிழ் ஆதரவு கட்சிகள்

ஆனால் லைகா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தமிழர் வாழ்க்கைக்காக பல நல்ல விஷயங்களை தாம் செய்து வருவதாகவும் லைகா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் கத்தி படத்தின் பட்ஜெட் என்பது தனது இரண்டு நாள் வருமானம் என்று கூறிய தயாரிப்பாளர் சுபாஷ்கரண், படத்தை லைகா பேனரில் வெளியிடுவதில் உறுதியுடன் உள்ளார். இந்த நிலையில் படத்தை வெளியிட நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம் என்று வேல் முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. 

இதில் 150 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது லைகா. சென்சாருக்கு படத்தைப் போட்டுக் காட்டியதில், எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் யு சான்று வழங்கினர். 400 அரங்குகளில் வரும் அக்டோபர் 22-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி மற்றும் மாணவர் அமைப்புகள் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று, அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டனர். மீறித் திரையிட்டால் போராட்டம், வெடிக்கும் என்று எச்சரித்தனர்.

இத்தோடு நில்லாமல், நேற்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதில் அபிராமி ராமநாதன் உள்பட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில், கத்தி படத்துக்கான எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்த எதிர்ப்பை மீறி படத்தைத் திரையிட வேண்டாம் என்றும் திரையரங்க நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தைத் திரையிட கொடுக்கப்பட்ட முன்பணத்தை வாங்கிக் கொள்ளும்படி திரையரங்க உரிமையாளர்களை வேல்முருகன் கேட்டுக் கொண்டார். எனவே மேற்கொண்டு என்ன முடிவெடுப்பது என்று குழம்பிய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மீண்டும் இன்று சந்தித்துப் பேசவிருந்தனர். ஆனால் இன்று ஜெயலலிதா வழக்கு, ஜாமீனில் விடுதலை போன்ற காரணங்களால் சந்திப்பை நாளை தள்ளி வைத்துள்ளனர். நாளைய சந்திப்புக்குப் பிறகே கத்தி வெளியாகுமா இல்லை என்பது தெரியும்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top