↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகை உலுக்கிய தீர்ப்பு என்று சொல்லுமளவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த கையோடு ரூ100 கோடி அபராதம் விதித்த நீதிபதி குன்ஹாவின் 1136 பக்க தீர்ப்பையும் பூதக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்து குற்றம் குறை கண்டுபிடிப்பதுக் கொண்டிருக்கின்றனர் அதிமுகவினர்.. 18 ஆண்டுகாலம் நடைபெற்ற ஜெயலலிதா வழக்கில் கடந்த மாதம் 27-ந் தேதி நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். ஆனாலும் கூட நீதிபதி குன்ஹா தீர்ப்பை அவசரம் அவசரமாக கொடுத்துவிட்டதாக குமுறிக் கொண்டிருக்கிறது அதிமுக தரப்பு. இதனாலேயே நீதிபதி குன்ஹா தீர்ப்பில் எங்காவது பிழை கிடைத்துவிடாதா என்று அந்த 1136 பக்க தீர்ப்பையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் அதிமுகவினர்.
அந்த வகையில் அதிமுகவினருக்கு அல்வா மாதிரி ஒரு விஷயம் கிடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி அதிமுகவினர் பகிர்ந்த ஒரு பதிவு இதுதான்: நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பினல் 665ஆம் பக்கத்தில், தங்க நகைகள் 20548 கிராம் என்றும் ஒரு கிராமின் மதிப்பு ரூபாய் 433 என்றும் குன்ஹகா மதிப்பீடு செய்துள்ளார் அப்படி என்றால் 20548X433=88,97,284 இது உண்மை கணக்கு.
ஆனால் குன்ஹகாவோ 20548X 433=8,90,55,032 என்று கணக்கு போட்டுள்ளார். இப்படி அவசரகதியில் தீரப்பை வழங்கியே ஆகவேண்டும் என பல தவறுகள் இந்த நீதிபதியின் தீர்ப்பில் இடம்பெற்றுளன. எனவே மேல்முறையீடு செய்யும் போது இந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு வாங்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன இதுதான் அதிமுகவினர் பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு பதிவு. அதாவது நீதிபதி குன்ஹா அவசரம் அவசரமாக தப்பும் தவறுமாக கணக்கு போட்டு நகைகளின் மதிப்பை கூட்டி கூட்டிப் போட்டுவிட்டார் என்பது அதிமுகவினர் கருத்து.
நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவின் நகைகள் மதிப்பை கூட்டித்தான் போட்டுள்ளாரா? பார்க்கலாம் 665ஆம் பக்கத்தில் 20548 X 433=8,90,55,032 என்று இடம்பெற்றுள்ளது. (ரூ 8 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 32) குன்ஹா குறிப்பிட்டுள்ளது படி பார்த்தால் 20548X433=88,97,284 என்றுதான் வந்திருக்க வேண்டும். (அதாவது 88 லட்சத்து 97 ஆயிரத்து 284) என்றுதானே வந்திருக்க வேண்டும். அதனால்தான் அதிமுகவினர் குன்ஹா தமது தீர்ப்பில் தப்பும் தவறுமாக கணக்கை போட்டு நகை மதிப்பை மிகை மதிப்பாக காட்டியிருக்கிறார் என்கின்றனர்.
உண்மையில் என்ன நடந்துள்ளது?
நீதிபதி குன்ஹா தமது தீர்ப்பில் 647-ம் பக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4334 என்று பதிவு செய்து கணக்கிட்டுள்ளார். ஆனால் 665ஆம் பக்கத்தில் 20548X433=8,90,55,032 என்று இடம்பெற்றுள்ளது. இதனால் குன்ஹா ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ433 என்று மதிப்பிட்டு தவறான கணக்கைப் போட்டுவிட்டார் என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ4334 என்ற அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் குன்ஹா குறிப்பிடும் ரூ 8 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 32தான் வருகிறது. அதனால் 665 ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருக்க வேண்டியது 20548X4334=8,90,55,032. தீர்ப்பை டைப்பிங் செய்யும் போது "4" என்பது மிஸ்ஸிங்..ஆகிவிட்டது என்பதுதான் யதார்த்தம். இந்த டைப்பிங் மிஸ்டேக்தான் அதிமுகவினருக்கு இப்போ மெல்ல கிடைத்த அவுலாகவும் விழுங்கக் கிடைத்த அல்வாவாகவும் மாறியிருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment