இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதை புத்தகத்தில் டிராவிட்டை பாராட்டி கூறியுள்ளார்.
கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
இந்நிலையில் அவர் தனது சுயசரிதை பற்றிய புத்தகம் ஒன்றை இந்த வாரம் வெளியிடுகிறார். இந்த புத்தகத்தில் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் உள்ள சில வீரர்களை பற்றி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மேலும் தனது சுயசரிதையில் இந்திய அணி முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டை பாராட்டியுள்ளார். அவரை தனது குரு என்றும் வெகுவாக புகழ்ந்து உள்ளார்.
இதுபற்றி பீட்டர்சன் அந்த புத்தகத்தில் கூறியிருப்பதாவது,
நான் விளையாடிய காலகட்டத்தில் டிராவிட் இந்திய துடுப்பாட்டக்காரர்களின் ஹீரோவாக திகழ்ந்தார். சுழற்பந்தை எதிர்கொள்வதில் அவர் மிகவும் திறமையானவர்.
நான் அவரிடம் சுழற்பந்தை எதிர்கொள்வது பற்றிய பல்வேறு நுணுக்கங்களை கேட்டு அறிந்தேன். இமெயில் மூலம் எங்களது உரையாடல்கள் இருந்தது. எனது கிரிக்கெட் ஆட்டம் மேம்பாடு அடைய டிராவிட் மிகவும் உதவியாக இருந்தார்.
ஐ.பி.எல். போட்டியும் எனக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தது. எனது எதிர்காலம் இனி ஐ.பி.எல். போட்டி தான். என்னால் அந்த போட்டியில் தொடர்ந்து இயல்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment