↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உங்கள் உறவில் முறிவு ஏற்பட்டால், இந்த உலகமே உங்களுக்கு எதிராக திரும்பியதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். நடப்பது எதுவுமே சரியாக தெரியாது. உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உலகத்திற்குள் மூழ்கி போவீர்கள். ஆனால் இது எந்தளவிற்கு சரியாகும்? ஒரு உறவு முறியும் போது அதனை இப்படி தான் கையாள வேண்டுமா? சற்று யோசியுங்கள்!
இந்த உலகத்தில் உள்ள யாருமே உங்களுடன் வரப்போவதில்லை; ஒருவரைத் தவிர - அது நீங்கள் தான். அதனால் வாழ்க்கையில் ஏதேனும் சரியாக நடக்கவில்லை என்றால், அதற்கு உங்களை நீங்கள் தண்டிக்க வேண்டுமா? வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் சகஜமே. அதற்காக எதிர்மறை சூழ்நிலைகளின் போதெல்லாம் சோர்ந்து போவது சரியாகாது. கெட்ட விஷயங்கள் நடக்கும் போதெல்லாம், அதனை தொடர்ந்து நல்லது ஏதேனும் நடக்க தான் செய்யும். அதற்கு வேண்டியதெல்லாம் அதனை சந்திக்கும் மன உறுதியே.
வாழ்க்கையை முடிப்பதற்கு உறவு முறிதல் ஒரு காரணமாகாது. கண்டிப்பாக அது உங்களுக்கு சற்று முட்டுக்கட்டையை போட தான் செய்யும். ஆனால் நீங்கள் பெரிய உயரத்தை தொட அதுவும் கூட காரணமாக அமையலாம். அதனால் உங்கள் இதயம் கூறுவதை கேளுங்கள். உங்கள் இதயம் உங்களுக்கு சிறந்த உறவு அறிவுரையை வழங்கும்.
சற்று நேரம் கொடுங்கள்
அது சுலபம் இல்லை தான். ஆனாலும் நீங்களும், உங்களின் தற்போதைய சூழ்நிலையையும் சற்று ஆறப் போடுங்கள். நீங்கள் விரும்பியவர் உங்களுடன் இல்லாதது உங்களுக்கு வருத்தமாக தான் இருக்கும். ஆனால் இந்த சூழ்நிலையுடன் நீங்கள் ஒத்துப் போக வேண்டும்.
குற்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள்
ஒரு உறவு முறிவதற்கு நீங்கள் மட்டுமே முழு காரணமாக இருக்க முடியாது. ஒரு உறவு வெற்றிகரமாக அமைவதற்கு இரண்டு பேரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்பது ஒவ்வொரு உறவிற்குமான பொதுவான அறிவுரையாகும். உங்களுக்கு அது சரியாக அமையவில்லை என்றால், இரண்டு பேருமே அதற்கு காரணமாக அமையலாம்.
எழுதுங்கள்
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவைகளை எழுதுவதும் ஒரு வழியாகும். எண்ணங்கள் மூளையில் இருக்கும் வரையில் அது உங்களுக்கு தொந்தரவாகவே இருக்கும். உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க தொடங்கும். அதனால் ஒரு பேப்பரில் அனைத்தையும் எழுதி உங்கள் பாரத்தை குறையுங்கள். இதனால் அனைத்தையும் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கவும் செய்யும்.
நண்பர்களோடு பேசுங்கள்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, வெளியே சென்று நண்பர்களை சந்தியுங்கள். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது உங்கள் உறவின் முறிவை கையாள உதவாது. அது நிலைமையை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் நண்பர்களிடம் பேசுங்கள், நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள், கவனத்தை திசை திருப்புங்கள்.
புதிய செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்
உங்கள் பழைய துணையோடு சேர்ந்து நீங்கள் பல செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது அவைகளை தனியாக செய்யும் நேரமாகும். நீண்ட நாள் செய்யாமல் இருந்த பொழுது போக்கை தூசி தட்டுங்கள், சமூக சேவையில் ஈடுபடுங்கள், புதிய விளையாட்டில் ஈடுபடுங்கள் அல்லது புதிய வாத்திய கருவியை கற்றுக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகள் எண்ணிலடங்காமல் உள்ளது. இதுவே கூட உங்களுக்கு ஒரு புதிய ஆரம்பமாக அமையலாம்.
சுறுசுறுப்புடன் இருங்கள்
உறவில் முறிவு ஏற்பட்ட காரணத்தினால் உங்களை நீங்களே அலட்சியம் செய்ய முடியாது. வெளியே சென்று சுறுசுறுப்புடன் இருங்கள். அது ஜிம்மாக இருக்கலாம், பூங்காவாக இருக்கலாம் அல்லது நடனம் ஆடும் இடமாக கூட இருக்கலாம். மொத்தத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மனதும் இதயமும் சோகத்தை மறக்க வேண்டும்.
ஞாபகத்தை தூண்டுபவைகளை நீக்கவும்
ஒரு உறவில் முறிவு ஏற்பட்டால், அது சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தான். அதனால் அந்த உறவை ஞாபகப்படுத்தும் அனைத்தையும் வீட்டில் இருந்து முதலில் நீக்குங்கள். அவைகள் இருந்தால் மீண்டும் பழைய ஞாபகங்கள் உங்களை கொல்லும். ஞாபகங்களை கிளரும் பொருட்கள், அவை மன ரீதியாக இருந்தாலும் கூட, அவைகளை நீக்க வேண்டும்.
பயணம் செய்யுங்கள்
உறவில் ஏற்பட்டுள்ள முறிவை கையாள ஒரு சிறந்த வழி, பயணிப்பது. உங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யுங்கள். அது உங்கள் பழைய துணையுடன் நீங்கள் சென்ற இடமாக இருக்க வேண்டாம். புதிய இடம், புதிய ஆட்கள் ஆகியவற்றை அனுபவித்து, வித்தியாசமான அனுபவத்தை பெற்றிடுங்கள்.
உங்கள் முடிவில் நிலையாக இருங்கள்
உங்கள் உறவின் முறிவு என்பது இறுதியான முடிவாகும். அதனால் உங்கள் துணையை மீண்டும் சமாதானம் செய்ய போகிறீர்கள் என்ற பெயரில், எடுத்த முடிவில் இருந்து பின் வாங்காதீர்கள். உங்கள் இருவருக்கு இடையே எல்லாம் சுமூகமாக போக வேண்டுமானால், அது தானாகவே சிறிது காலத்தில் நடைபெறும். ஆனால் நீங்கள் வலிய எடுக்கும் முயற்சி நிலைமையை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் உங்கள் முடிவில் நிலையுடன் இருங்கள், காலம் அனைத்திற்கும் பதிலை தரும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment