↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பாஜகவுக்கு இழுக்க தமிழக தலைவர்கள் முதற்கொண்டு அகில இந்தியத் தலைவர்கள் வரை பலரும் முயன்று வரும் நிலையில் தனது தூய்மை இந்தியா சவாலுக்கு ரஜினிகாந்த்தை அழைக்காமல் கமல்ஹாசனை பிரதமர் மோடி அழைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி பாஜகவுக்கு வந்து விடுவார், அடுத்த தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவோம் என்ற பெரும் நம்பிக்கையில் தமிழக பாஜகவினர் உள்ளனர். ரஜினியும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். சமீபத்திலும் கூட ரஜினியை பாஜகவினர் தொடர்ந்து தொடர்பு கொண்டபடி இருந்தனர். பாஜக தலைவர் அமீத் ஷாவே நேரடியாக ரஜினியை கட்சிக்குள் இழுக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டதாகவும் கூட கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் நடந்த மோடியின் தூய்மை இந்தியா பிரசாரத்திற்கு ரஜினிக்குப் பதில் கமல்ஹாசனை மோடி அழைத்து பலரை ஆச்சரியப்படுத்தியது.

தூய்மை இந்தியா சவாலுக்காக 9 பேரை மோடி பரிந்துரைத்திருந்தார். அதில் ஒருவர்தான் கமல்ஹாசன். சச்சின் டெண்டுல்கரும் இதில் அடங்கியிருந்தார். ஆனால் ரஜினிகாந்த்தின் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

அதேசமயம், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கெல்லாம் கூட மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினியை விட்டு உலக நாயகன் கமல்ஹாசனை மட்டும் மோடி அழைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், கமல்ஹாசன் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தனது ரசிகர்கள் 9 லட்சம் பேர் நாட்டை தூய்மைக்கும் பணியில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து அசத்தி விட்டார்.

ரஜினி பெயரை மோடி வேண்டும் என்றே தவிர்த்தாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அல்லது ரஜினிகாந்த்துக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபத்தில் சர்ச்சைக்குரிய சுப்பிரமணியம் சுவாமி, ரஜினிகாந்த்தை பாஜகவில் சேர்ப்பதை விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். ஒரு வேளை சுவாமியின் கருத்துக்கு மோடி சம்மதம் தெரிவிக்கும் வகையில் இப்படி ரஜினியைத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top