↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத், ஆர்யா நடித்த ஆரம்பம்' வெற்றிப் படத்தை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய திரைப்படம் 'யட்சன்'. யூடிவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, கிருஷ்ணா ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வாதி, தீபா சன்னிதி, கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் ஆகியோர்களும் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல், காமெடி மற்றும் விறுவிறுப்பான ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து தற்போது பின்னணி இசை மற்றும் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியிலும், மே மாதத்தில் பட வெளியீடவும் யூடிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா நடித்த 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' திரைப்படம் மே 15ஆம் தேதி ரிலீசாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படமும் மே மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டால் ஒரே மாதத்தில் ஆர்யா நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top