↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெங்கட்பிரபுவின் 'சரோஜா' படத்தில் கோடான கோடி என்ற பாடலிலும், கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் படத்திலும்  நடித்த பிரபல கன்னட நடிகை நிகிதா, தற்போது விஷால் நடித்து வரும் ஒரு படத்தில் குத்தாட்டம் ஒன்றில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் 'பாயும் புலி' என்ற படத்தில்தான் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை பின்னி மில்லில் கலை இயக்குனர் ராஜீவன் அமைத்த பிரமாண்டமான காய்கறி செட்டில் விஷால், நிகிதா ஆடும் குத்தாட்டக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் கூறினர்.

சத்யம்' படத்திற்கு பின்னர் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஷாலுக்கு காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடந்த உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஷாலின் அண்ணனாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top