↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கேரளாவில் இருந்து வந்த நடிகைகள் அனைவருமே தமிழில் ஜொலித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு கேரள வரவான கீர்த்தி சுரேஷ் தற்போது பிசி ஷெட்யூலில் இருக்கின்றார்.

ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்' மற்றும் சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்' ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிதாக பாபிசின்ஹாவுடன் ஜோடி சேர சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாபிசிம்ஹா ஹீரோவாக நடித்துவரும் 'பாம்புச்சட்டை' படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். மனோபாலா மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆதம் தாசன் இயக்குகிறார். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பரிசு வென்ற அஜிஷ் அசோக் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top