↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள், நீதியான தேர்தல் ஒன்று தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே தமக்கு அரச ஊடகங்களின் பிழையான செயற்பாடுகள், தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்தல், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய 55 உறுப்பினர்களை கொண்ட அமைப்பின் தலைவர் எஸ் வை கியூரைசி இன்று முதல் தமது கண்காணிப்பாளர்கள் 22 மாவட்டங்களில் பரந்தநிலையில் பணியாற்றுவர் என்று குறிப்பிட்டார்.

தம்மால் வன்முறைகள் குறித்து அறிக்கையிடமுடியும். எனினும் அவற்றை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல்கள் ஆணையாளராக செயற்பட்ட கியூரைசி, இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தேர்தலை நியாயமானதாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.

பொலிஸாரும் நீதியான தேர்தல் தொடர்பில் தமக்கு உறுதியளித்துள்ளதாக கியூரைசி தெரிவித்தார்.
இந்த உறுதிமொழிகளில் நம்பிக்கையை வெளியிட்ட கியூரைசி, வடக்கில் மக்களின் வாக்களிப்பை தடுக்க படையினர் தமது செல்வாக்கை பயன்படுத்தப்படலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top