↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரௌடிதான் என விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும் இன்னொருபுறம் தயாரிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கெனவே தான் நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்து வரும் அவர் அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. புதுமுகங்கள் நடிக்க அவர் படத்தை தயாரிக்க மட்டுமே செய்கிறார். லெனின் பாரதி இயக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார்.
சுசீந்திரனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இளையராஜா இசையமைக்க, படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் ‘தரமணி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஈஷ்வர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top