↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தென்னஞ்சோலைகளிற்கு உள்ளேயே வாழும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து உண்ணுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில், இயற்கை சம்பந்தமான ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்து வெளியிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 

இது போலவே இன்னொரு நண்டு மனிதனின் உயிர்காக்க இன்று வரை உதவி வருகிறது. 
கனடா போன்ற நாடுகளில் பெரும் பணமீட்டும் நடவடிக்கையாக snow crab எனப்படும் ஒரு நண்டின் வியாபாரமே மீன்பிடித்துறையில் திகழ்கிறது.

அதே போன்று குதிரைலாட (horse shoe) நண்டின் இரத்தம் இன்றுவரை மனிதனின் காயங்களிற்கான, சத்திரசிகிச்சைக்கான தொற்றுநீக்கியாக பாவிக்கப்பட்டு வருவதோடு, ஒரு கலன் நண்டு ரத்தம் 60 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டு வருகிறது என்பது உள்ளிட்ட இதுவரை பார்வைக்கு வராத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top