↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அதிக படங்களில் நடிப்பதிலும், வாய்ப்பை பெறுவதிலும் போட்டியில் குதித்திருக்கும் ஸ்ருதி, சமந்தா, தங்களது போட்டியை அத்தோடு நிறுத்தாமல் விளம்பர படங்களை கைப்பற்றுவது, டாப் ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் ஜோடி சேருவது என்று போட்டி தொடர்கிறது. இந்த மோதல் இணைய தளம் வரை விரிவடைந்திருக்கிறது. ஏற்கனவே திரிஷா, ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைய டுவிட்டர் பக்கத்தில் 10 லட்சம் ரசிகர்கள் எண்ணிக்கையை தொட்டிருக்கின்றனர். அந்த இடத்தை பிடிப்பதற்காக சமந்தாவும் விடாமல் டுவிட்டர் வலைபக்கத்தை கையாண்டு வருகிறார். சமீபத்தில் அவரும் 10 லட்சம் ரசிகர்களை தனது வலைபக்கத்தின் மூலம் வளைத்திருக்கிறார்.
இது பற்றி சமந்தா கூறும்போது, ‘10 லட்சம் இணைய தள ரசிகர்கள் என்னை பின்தெடர்வதில் மகிழ்ச்சி. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெளிப்படையான எனது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்வேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ள சமந்தா, விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள‘ படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என சமந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments:
Post a Comment