↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஷால், ஹன்சிகா,  நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள 'ஆம்பள' திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்து இணையதளங்களில் சில தவறான தகவல்கள் தனக்கு வருவதாகவும், அதை தெளிவு படுத்த விரும்புவதாகவும் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் ஆன குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'ஆம்பள' படத்தில் தயாரிப்பாளர் முழுக்க முழுக்க விஷால்தான். அவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை முதலீடாக போட்டு இந்த படத்தை தயாரித்து வந்துள்ளார். ஆனால் ஒருசில இணையதளங்கள் இந்த படத்தில் என்னுடைய பெயரை இணைதயாரிப்பாளர் என்று செய்தியை வெளியிட்டு வருகின்றன. இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். ஆம்பள படத்தை எனது கணவர் இயக்குகிறாரோ தவிர எனக்கும் அந்த படத்திற்கு எவ்வித சம்மந்தமும் இல்லை' என்று கூறியுள்ளார்.

விஷால்-ஹன்சிகா ஜோடியுடன் இந்த படத்தில் மாதவிலதா, மதுரிமா, வைபவ், சந்தானம், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படட்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top