↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பவன் கல்யாண், வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் தெலுங்கு படம் ‘கோபாலா கோபாலா'. இந்தியில் வெளியாகி ஹிட்டான ‘ஓ மை காட்‘ படத்தின் ரீமேக். இப்படத்தை வெளியிடுவதற்கு இந்து அமைப்பினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதன் ஆடியோ ரிலீஸ் ஐதராபாத்தில் நடந்தது. பவுன் கல்யாண், வெங்கடேஷ் இருவரது ரசிகர்களும் விழாவில் பங்கேற்க திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் செக்யூரிட்டிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். 

கூட்டத்தை அரங்கிற்குள் அனுமதிப்பதில் விழா நடத்திய நிறுவனத்துக்கும் செக்யூரிட்டிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் அடிதடியில் ஈடுபட்டனர். கே.சீனிவாஸ் என்பவருக்கு கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கத்தி குத்துக்கு ஆளானவர் பவன் கல்யாண் ரசிகர் மன்ற தலைவர். விழாவில் பங்கேற்க பாஸ் வழங்கியதில் பற்றாக்குறை ஏற்பட்டதால் அவர்களை உள்ளே அனுமதிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதையடுத்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top