↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தோல்வியெல்லாம் சகஜமப்பா... பிரபுதேவா சொல்கிறார்



















வரிசையாக இந்தியிலும் ஹிட் கொடுத்த பிரபுதேவா சமீபத்தில் இயக்கிய ‘ஆக்ஷன் ஜாக்ஸன்‘ படம் தோல்வியை தழுவியது. இப்படத்தையடுத்து அவர் ‘ஏபிசிடி‘ 2ம் பாகத்தில் நடிக்கிறார். ரெமோ டிசோசா இயக்குகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியது:நான் நடிகன் கிடையாது. ஆனால் என்னை நடிகனாக பார்க்கிறார் ரெமோ. அவர் கேட்டுக்கொண்டதால் மீண்டும் நடிக்கிறேன். ஆக்ஷன் ஜாக்ஸன் படம்  தோல்வியா? என்கிறார்கள். 

சில படங்கள் வெற்றி அடையும், சில படங்கள் தோல்வியை தழுவும். ரசிகர்கள் இப்படத்தை விரும்பவில்லை. இது சினிமாவில் வழக்கமான ஒரு நிலைதான். இதையே ஏன் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் எனக்கு அனுதாபம் ஏற்பட்டது பட ஹீரோ அஜய் தேவ்கன் மீதுதான். அவருக்கு அடுத்து நிச்சயம் வெற்றி படம் தருவேன். மேலும் அக்ஷய் குமார் நடிக்க நான் இயக்கும் ‘சிங் ஈஸ் பிளிங்‘ பட ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது என்றார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top