↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
seeman-kandupidi-kandupidi-21-01-15பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி என பல படங்களை இயக்கியவர் சீமான். அதையடுத்து, விஜய்யை வைத்து ஒரு படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
மேலும், மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், மாஸ்கோவின் காவேரி, கண்டுபிடி கண்டுபிடி, நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ உள்பட சில படங்களில் அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார்.
அப்படி அவர் நடித்த படங்களில் கண்டுபிடி கண்டுபிடி என்ற படம் மட்டுமே இன்னும் திரைக்கு வரவில்லை. 2012ம் ஆண்டு தயாரான அப்படத்தில் சீமான் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ராம.சுப்புராயன் இயக்கிய அப்படத்தில் முரளி-ஐஸ்வர்யா தேவன் என்ற இளசுகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும், அந்த சமயத்தில் சீமான் நடித்த சில படங்கள் வெற்றி பெற்று வந்ததால், இந்த படத்தின் தயாரிப்பாளர் அதிக தொகைக்கு விற்க ஆசைப்பட்டதாகவும், அதன்காரணமாகவே விநியோகஸ்தர்கள் பின்வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தை வெளியிடும் முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் இறங்கியுள்ளனர். அதனால் சீமான் போலீஸ் கெட்டப்பில் மிடுக்காக இருக்கும் புகைப்படங்களை விரைவில் பப்ளிசிட்டியில் இறக்கி விடுவார்கள் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top