தமிழ் சினிமாவில் நேர்மையாக, உண்மையாக முயற்சி செய்தால் கண்டிப்பாக எதிர்ப்பார்த்த லட்சியத்தை அடையளாம் என்பதற்கு பலர் உதாரணம், அந்த வகையில் இசைத்துறையில் நீண்ட நாட்களாக தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக் கொண்டு இருந்தவர் தான் டி. இமான்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் தமிழன் படத்தில் அறிமுகமானவர் தான் இந்த டி. இமான், இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்ட் வருவார் என எல்லோரும் எதிர்ப்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
இதன் பிறகு ஆணை, 6.2, வாத்தியார், குஷ்தி, சின்னா, மதராசி என சின்ன படங்களுக்கே இசையமைத்து வந்தார். இதில் லீ, திருவிளையாடல் ஆரம்பம் என ஒரு சில படங்களே வெற்றி பெற்றது. ஆனால், இவரின் முயற்சி மட்டுமே என்றுமே சோடை போகவில்லை.
இதன் பலனாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் இவரின் இசை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கும்கி, தேசிங்குராஜா, ஜில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிகரம் தொடு, கயல் என அனைத்து படங்களின் ஆல்பங்களும் சூப்பர் ஹிட் தான்.
தற்போது ரஜினிமுருகன், வலியவன், 10 எண்றதுக்குள்ள, ரோமியோ ஜுலியட், பஞ்சுமிட்டாய், நான் தான் சிவா என இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது. இவை அனைத்தும் வெற்றி பெற வேண்டும், இன்று போல் என்றும் தன் மெலடியால் நம்மை உருக வைக்க வேண்டும்.
0 comments:
Post a Comment