↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Trisha Illana Nayanthara shooting kickstarts
பொங்கலுக்கு வெளியாகியுள்ள ‘டார்லிங்’ படத்தில் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அவருக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்றுதந்துள்ளது.
ரசிகர்களின் ‘டார்லிங்’காய் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ‘கயல்’ அனந்தியுடன் ஜோடி சேருகிறார். சமீபத்திய அறிமுகங்களில் மிக உன்னிப்பாக கவனிக்க படும் ஜி வி பிரகாஷ் குமாரும்,'கயல்' கதாநாயகி ஆனந்தியும் இந்த படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பை கூட வைக்கிறது.
இப்படத்தின் First look போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த படத்தில் உள்ள ஜி வி பிரகாஷ் குமாரின் வித்தியாசமான Get up பரவலாக பாராட்டுப் பெற்றது. வெளியான சிறிது நேரத்திலேயே அதிக நபர்களால் பகிரப்பட்டு ட்விட்டரில் Trending ஆனது.
Cameo films நிறுவனம் சார்பில் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பு நேற்று துவங்கியது. "ஒரு அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் முக்கியமான சம்பவங்களே ‘திரிஷா இல்லனா நயன்தாரா’" என்றார் இயக்குனர் ஆதிக் '.சென்னைக்கு அருகே உள்ள கிருகம்பாகத்தில் உள்ள ஒரு மாவு மில்லில் படப்பிடிப்பு துவங்கியது.
படத்தின் தலைப்பை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் பலரும் த்ரிஷாவும்,நயன்தாராவும் வந்து இருக்கிறதாக கருதி பெரும் அளவில் கூடி விட்டனர்.அவர்கள் இல்லாதது அவர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் தந்தாலும் 'கயல்' ஆனந்தியை பார்த்த அவர்கள் இந்தப் பொண்ணும் ரொம்ப அழகாதான் இருக்கா என்று பேசியவாறே கலைந்தனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top