↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், இயோன் மோர்கன் அவரது முன்னாள் காதலியுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தை பத்திரிகைகளில் வெளியிடப்போவதாக மிரட்டல் வந்துள்ளது.
இங்கிலாந்து, ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் இயோன் மோர்கனுக்கும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஐந்து வருடங்கள் முன்பு உறவு இருந்தது.
அந்த பெண்ணுடன் டேட்டிங் செய்து சுற்றித்திரிந்தார் மோர்கன். தற்போது அந்த பெண் வேறு ஒருவருடன் உள்ளார்.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதல், அணித்தலைவர் மோர்கன் காதல் பற்றிய ரகசியங்களை இங்கிலாந்து மற்றும், அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ஐந்து இலக்க பணம் அளிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரிட்டீஷ் மற்றும் அவுஸ்திரேலிய பொலிசார் நடத்திய விசாரணையில், மோர்கனின் முன்னாள் காதலியிடம் தற்போது உறவு வைத்துள்ள நபர்தான், இந்த ரகசியங்களை தெரிந்து கொண்டு மிரட்டல்விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் எச்சரிக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top