
கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை.
பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
என்றாலும், வாத்ஸாயனர் காலத்தில் கூறப்பட்டுள்ள திருமணங்களில் காந்தர்வ திருமணம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. காந்தர்வ திருமணம் என்றால் காதல் திருமணம் என்று பொருள்.
அதன்படி ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல், ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும், பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் ஓரினச் சேர்க்கை மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டது.
சரி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு எப்படி அந்தத் தூண்டுதல் ஏற்படுகிறது? என்றால், பல மருத்துவ கருத்துகள் நிலவுகின்றன.
மரபணுக் கோளாறினால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதனை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த போது, அதற்கான எந்த நிரூபணமும் இல்லை என்று மறுத்து விட்டது.
குழந்தைப் பருவத்தின் போது நெருக்கடியான சூழலில் வளர்வதால், மனப் பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையில் நாட்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் ஆய்வு செய்த மருத்துவ உலகினர் மறுத்துள்ளனர்.
வேறு தகவலின்படி, குழுவாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஓரினச் சேர்க்கை ஈடுபாடு இருந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அந்த ஈடுபாடு உருவாகும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இவையெல்லாமே யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமே கூறப்படுபவை என்று மருத்துவத் துறையினர் நிரூபித்து விட்டனர்.
எனவே பிறவியிலேயே ஓரினச் சேர்க்கையாளர்கள் அதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
பல நேரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஏன் அதுமாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது.
20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.
சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.
மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.
தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.
இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன.
ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும்.
சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது.
முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.
உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு.உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான்.
அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது.
இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.