↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய விலைகளின் பட்டியல்படி:
92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 117 ரூபா,
95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 128 ரூபா,
டீசல் ஒரு லீற்றர் 95 ரூபா,
விசேட டீசல் 110 ரூபா,
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 65 ரூபாவாகும்.
புதிய தேசிய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய எரிபொருள் விலைக்குறைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் விரைவில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணையின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, இதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் ஒரு லீ;ற்றர் 117 ருபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 95 ரக ஒக்ரேன் பெற்றோலின் விலை 128 ரூபாவாக விறப்னை செய்யப்பட உள்ளது.
ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 81 ரூபாவிற:கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணை நாளை முதல் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top