↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தெலுங்கு சினிமாவின் சீனியர் காமெடி நடிகரான எம்.எஸ்.நாராயணா இன்று(ஜன.,23ம் தேதி) காலை காலமானார்.. 

இவரது சிறப்பு என்னவென்றால், ஜூனியர் என்.டி.ஆர் படத்திலும் இருப்பார், பவன் கல்யாண் படத்திலும் இருப்பார்.. நாகர்ஜுனா படத்திலும் இருப்பார்.. அவ்வளவு ஏன் கடந்த வருடங்களில் வெளியான இளம் ஹீரோக்களின் படங்களில் இவர் இல்லாத படங்களே இருக்காது.. 

கதை எழுதும்போதே இவருக்கென ஒரு கேரக்டரை ஒதுக்கிவிடும் அளவுக்கு திறமையான நகைச்சுவை நடிகர். இன்று அவர் காமெடியனாக நடித்துள்ள பட்டாஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அவர் காலையில் மரணத்தை தழுவிய நேரத்தில், திரையரங்குகளில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருந்தார். கலையை நேசித்த ஒரு நடிகனாக, தான் நடித்த படம் வெளியான நாளில் மரணத்தை தழுவிய எம்.எஸ்.நாராயணாவுக்கு இதைவிட சிறந்த காணிக்கையும் சமர்ப்பணமும் இருக்கமுடியுமோ..?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top