நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கொன்று நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
வழக்கின் முக்கிய சாட்சியாக மத்திய வங்கியின் கீழ் செயற்படும் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தொடர்ந்தும் நிதியமைச்சின் கீழ் இயங்க அனுமதிப்பது சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு நிதியமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த குறித்த இரண்டு நிறுவனங்களும் இவ்வாறு பிரதமரின் கீழ் உள்ள அமைச்சின் மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment