ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருப்பதால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் பல பச்சிளங்குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி அனாதையாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சண்டையில் அனாதையான, பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குழந்தையை பிரபல ஹாலிவுட் நடிகையும் சமூக சேவகியுமான ஏஞ்சலினா ஜோலி தத்தெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏஞ்சலினா ஜோலிக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூன்று குழந்தைகள் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் நடிகை, இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என அவதாரங்களில் பட்டையை கிளப்பி வரும் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு நடிகையாக மட்டுமின்றி சிறந்த சமூக சேவையாளராகவும் செயல்பட்டு வருவது குறித்து அவரது ரசிகர்கள் பெருமை கொள்கின்றனர். சிரியா நாட்டு குழந்தையை தத்தெடுத்த ஏஞ்சலினாவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆஸ்கார் விருது, மூன்று முறை கோல்டன் குளோப் விருது போன்ற பல விருதுகளை நடிகை ஏஞ்சலினா ஜோலி பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment