த்ரிஷாவுடன் பலர் கிசுகிசுக்கப்பட்டாலும் அதிகமாக அடிபட்டது தெலுங்கு, இந்தி நடிகர் ராணாவின் பெயர்தான். இருவரும் ஒன்றாக பார்ட்டி ரெஸ்டாரண்ட், விழாக்கள் என்று சுற்றியதை பத்திரிகையும், தொலைக்காட்சிகளும் அம்பலப்படுத்தின.
ஆனால், சமீபத்தில் இவர்களின் உறவு பிரேக்கப்பானது. அதன் பிறகே த்ரிஷா வருண் மணியனை காதலித்து இன்று நிச்சயதார்த்தமும் அவருடன் நடக்க உள்ளது.
இந்நிலையில் மும்பையில் பேட்டியளித்த ராணா, நானும் த்ரிஷாவும் காதலிக்கவேயில்லை என்று கூறியுள்ளார். நாங்கள் நட்பாகதான் பழகினோம். மீடியாதான் அதனை காதல் என்று எழுதியது. அதனை நான் மறுத்தது பத்திரிகைகளில்கூட வெளிவந்தது. எங்களுக்குள் நட்பு இன்னும் தொடர்கிறது. த்ரிஷா, வருண் மணியனை சமீபத்தில்கூட கோவாவில் சந்தித்தேன், அவர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேன் என்றார்.
நல்லவேளை த்ரிஷாவை தங்கச்சி ஸாரி, அக்கா என்று சொல்லவில்லை.
0 comments:
Post a Comment