↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். 'ரங்கூன்' என்ற டைட்டிலுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்காக கடந்த பல நாட்களாக ஹீரோயின் தேடும் படலம் நடந்தது. இறுதியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் முருகதாஸ் தெலுங்கு ஹிரோயின் ஒருவரை முடிவு செய்துவிட்டார். அவர் பெயர் சனா முக்பால். தெலுங்கில் கடந்த வருடம் வெளியான ஒரு படத்தில் நடித்த இவர் தமிழில் அறிமுகமாகும் படம்தான் ரங்கூன்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் தான் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top