ஜனாதிபதி தேர்தல் அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் இராணுவப்புரட்சிக்கான முயற்சி தொடர்பில் பிரதம நீதியரசரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத்துறையினர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் இன்று மாலை வாக்குமூலத்தை பெற்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில், மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை இந்தக்குற்றச்சாட்டின் பேரில் பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் தமக்கு இராஜதந்திர பதவி ஒன்று வழங்கப்பட்டால் மாத்திரமே பதவியை விட்டு விலக முடியும் என்று மொஹான் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.
மொஹான் பீரிஸ் மரியாதையாக பதவி விலக இது இறுதி வாய்ப்பு
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை புரட்சியின் மூலம் கைப்பற்ற முயற்சிக்கப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வுத்துறையினால் விசாரணை செய்யப்பட்ட முதலாவது பிரதம நீதியரசர் என்று புதிய வரலாற்றை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மொஹான் பீரிஸிடம் இன்று மாலை குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெற்றதாக உள்துறை அமைச்சர்; ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மொஹான் பீரிஸ் தொடர்ந்தும் பதவியில் நீடித்தால் அவர் பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகவேண்டியேற்படும்.
அத்துடன் மொஹான் பீரிஸ் தேர்தல் தினத்தன்று அலரி மாளிகையில் இருந்தமையை கண்ட பிரதான சாட்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார்.
இதனை வைத்துக்கொண்டு நீதியின் அடிப்படையில் மொஹான் பீரிஸ் மீது சட்டநடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
எனவே மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் ஒரு பிரச்சினை எழுவதை தடுப்பதை தடுக்க மொஹான் பீரிஸ், மரியாதையாக பதவிவிலக வேண்டும் என்று ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதுவே அவருக்கான இறுதி வாய்ப்பு என்றும் ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment