↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சுருதிஹாசன் 7 படங்களில் நடிக்கிறார். வேறு எந்த நடிகையிடமும் இவ்வளவு படங்கள் கைவசம் இல்லை. இந்த வருடம் அதிக படங்களில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் சுருதி முதல் இடத்தில் இருக்கிறார். 

தமிழில் விஜய் ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாகவும் நடிக்கிறார். நாகார்ஜுனாவுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் நான்கு படங்களில் நடிக்கிறார். 

இதுகுறித்து சுருதிஹாசன் கூறியதாவது:– இந்த வருடம் 7 படங்களில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா படங்களும் இந்த வருடமே வெளிவந்துவிடும். நாகார்ஜுன் படத்தில் கார்த்தியும் நடிக்கிறார். இது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இதில் எனக்கு முக்கிய வேடம். 

டைரக்டர் என்னை தேர்வு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தியில் ‘ராக்கி ஹேண்ட்ளம்‘, ‘வெல்கம்லேக்‘, ‘சுப்பார்‘, ‘யாரா‘ படங்களில் நடிக்கிறேன். இந்த வருடம் எனக்கு நல்ல வருடமாக துவங்கியுள்ளது. புதுவீடு வாங்கி குடியேறி இருக்கிறேன். கைவசமும் நிறைய படங்கள் உள்ளன. 

இவ்வாறு கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top