↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் ஆலோசகரும் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவருமான ஷீலா பாலகிருஷ்ணன் சாட்சியளித்த விவகாரம் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சிகளை அளித்துள்ளனர். அதில் தலைமைச் செயலாளராக பணியாற்றி, தற்போது தமிழக அரசின் ஆலோசகராகவும் உள்ள ஷீலா பாலகிருஷ்ணனும் முக்கிய சாட்சியம் அளித்திருந்தார். அவரது சாட்சி நீதிபதி அளித்த தீர்ப்பில் 801 பக்கத்தில் 94.5 வது பத்தியில் வெளியாகியுள்ளது.
இது குறித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கில், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அளித்துள்ள சாட்சியத்தில் கூறியதாவது: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய சொத்தாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற கம்பெனி காந்தி என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்த மானது. காந்தி, அசோகன், சக்திவேலு ஆகியோர் அந்த மில்லின் இயக்குநர் குழுவில் இருந்தனர். இந்த மில்லுக்கு ரூ.5 மதிப்புள்ள 6,10,000 பங்குகள் இருந்தன. இந்த மில்லில் இருந்து போதிய வருமானம் இல்லை என்பதால் அதை விற்பனை செய்ய முடிவு செய்தார்களாம். இந்த விஷயம் வெளியில் தெரிந்தவுடன் ராமசாமி உடையார் என்பவர் சுதாகரனை காந்தியிடம் அழைத்து வந்துள்ளார்.
பேச்சுவார்த்தை முடிவில் 5 ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ரூ.3 மதிப்பு என்ற அடிப்படையில் கைமாற்றப்பட்டது. சுதாகரன், சுந்தரவதனன், இளவரசி ஆகியோர் அந்த மில்லின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றனர். இதையடுத்து, தாங்கள் இயக்குநர் குழுவிலிருந்து விலக்கிக் கொள்வதாக காந்தி, அசோகன், சத்திவேலு ஆகியோர் சிப்காட் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அப்போது, சிப்காட் நிறுவனம் ஷீலா பாலகிருஷ்ணன் வசம் இருந்தது. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் தொடர்பான விசாரணையின்போது ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி தனது சாட்சியத்தில் இந்த கம்பெனியின் நிர்வாகம் மாற்றம் தொடர்பாக தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறு குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Home
»
news
»
news.india
» ஜெ.வுக்கு எதிராக ஷீலா பாலகிருஷ்ணன் சாட்சியம்: அம்பலப்படுத்திய குன்ஹா- அதிருப்தியில் அதிமுக!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment