↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்காவில் சக்கை போடு போட்ட செக்ஸ் டேப் என்ற திரைப்படம் இந்தியாவில் திரையிட அனுமதிக்கப்படாததால், அந்த படத்தின் விநியோகிஸ்தர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அமெரிக்காவில் வசூலை வாரிக்குவித்த செக்ஸ் காமெடி படம் செக்ஸ் டேப். இந்த படத்தினை இந்தியாவில் திரையிட உரிமை பெற்ற இந்திய பிரபல நிறுவனம் ஒன்று இந்திய சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பியது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் 90 நிமிடங்களில் சுமார் 40 நிமிடங்கள் செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படத்தில் இருந்தது. எனவே இந்த படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்க முடியாது என்று கூறி சென்சார் சான்றிதழ் வழங்க அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விநியோகிஸ்தர் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று முறையிட்டார். அங்கும் இந்த படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த படம் குறித்து சென்சார் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ",இந்தியா என்பது அமெரிக்கா போன்றதல்ல. அமெரிக்காவில் என்னவெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதெல்லாம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை" என்றார்.
கோடிக்கணக்கான பணம் செலவழித்து இந்திய உரிமையை பெற்ற அந்த பிரபலம் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment