இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோஹ்லி, டோனியை விட முன்னாள் அணித்தலைவர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி அதிக சம்பளம் பெறுகின்றனர்.
இந்திய அணியின் இயக்குனர் மற்றும் ஐ.பி.எல் பொறுப்பில் உள்ள ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஆண்டுக்கு ரூ.2 கோடி சிறப்பு ஊதியமாக பெறுகின்றனர்.
மேலும் ரவி சாஸ்திரி 2015ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணம் வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக செயல்படவுள்ளார்.
ஏற்கனவே வர்ணனையாளர் பணிக்காக கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆண்டுக்கு ரூ.4 கோடி வருமானம் பெறும் நிலையில், உச்சநீதி மன்றம் சிறப்பு ஊதியமாக ரூ.2.37 கோடி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி என்ற நிலையில் உள்ள ஊதியம் தற்போது ரூ.6 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ள அணித்தலைவர் டோனி, கோஹ்லி இவர்களை விட குறைவான ஊதியமே வாங்குகின்றனர்.
டோனி 35 போட்டிகளில் விளையாடி ரூ.2.59 கோடியும், கோஹ்லி 39 போட்டிகளில் விளையாடி ரூ.2.75 கோடியும் வாங்கியுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில், அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் இந்தியா அளவில் டோனி முதல் இடத்தையும், சர்வதேச அளவில் 5வது இடத்தையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment