கத்தி படத்தை முடித்துவிட்ட விஜய் தற்போது அப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார், கத்தி படம் வெற்றி பெற்றால் விஜய்யின் அடுத்த லெவல் வேற மாதிரி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தை முடக்க ஒரு பக்கம் சதி வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் டென்ஷனுடன் இருக்கிறாராம் விஜய் உள்ளிட்ட கத்தி படக்குழுவினர். இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கத்தி படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஜய்யின் அடுத்த படமான மாரீசன் படவேலைகள் ஆரம்பிக்கப்பட்டதால் கத்தி பட டென்ஷனை மறந்துவிட்டு புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் அவருக்கு விருப்பமில்லையாம். கத்தி படப்பிடிப்பு முடிந்ததும், சில நாட்கள் மட்டும் ரெஸ்ட் எடுத்துவிட்டு, சிம்புதேவன் இயக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படம் வெளியான பிறகு மாரீசன் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் என்று சொல்லிவிட்டாராம். விஜய் இப்படி சொன்னது சிம்புதேவன் மற்றும் அவரது யூனிட்டுக்கு உள்ளுக்குள் மனநிம்மதியை தந்திருக்கிறது. காரணம்…சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக்கடற்கரைசாலையில் கோவளம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 100 எக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனை மற்றும் தர்பார் செட்டை பிரமாண்டமாக அமைத்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். வேலையில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டமிட்ட தேதியில் செட் வேலைகள் முடியவில்லை. விஜய் படப்பிடிப்பை தள்ளி வைத்ததால் தற்போது ரிலாக்ஸாக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர்.
0 comments:
Post a Comment