↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்து வைத்தார்.
துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வில் பங்கு கொண்டு அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.
வடமாகாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் 7 டிப்போக்களுக்கான 70 பஸ் வண்டிகளை இன்று ஜனாதிபதி கையளித்தார்.
யாழ். இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, ஆகிய பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களை திறந்துவைத்து உரையாற்றினார்.
அதன்பின்னர் அந்தந்தப் பாடசாலை அதிபர்களால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. நெல்லியடி மத்திய கல்லூரியில் மஹிந்தோதய ஆய்வுகூடத்தைத் திறந்துவைத்ததுடன் இலசவக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.கன்னங்கராவின் 130 ஆவது ஜனனதின நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.


கன்னங்கராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 54 மகா வித்தியாலயங்களில் கல்வி கற்று சிறந்த அபிமானம் பெற்ற உன்னத மனிதர்கள் 54 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கிக் கௌரவித்தார்.
அத்துடன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி வி. அனுஷாவுக்கும் விருது வழங்கிக் கௌரவித்தார்.
நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.
இதேவேளை, யாழில் நேர அட்டவணைப்படி நிகழ்ச்சி நிரல்கள் இடம்பெறாமல் தாமதமாகியதால் அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடிந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினத்தில் நிகழ்ச்சி நிரல்களின் படி எந்த நிகழ்வும் ஒழுங்கில்லை அத்துடன் நேரம் தாமதமாகிறது. உங்களுக்கும் பசி, எனக்கும் பசி இவ்வாறான நிலைமையில் நேரத்தை கவனத்திற் கொண்டும்.
பசியின் கொடுமையாலும் மேடையில் வைத்து அரச அதிகாரிகளை கடிந்து கொண்டதுடன் உரையாற்றிய பின்னர் முடிவில் சபையினருக்கு நன்றி கூட தெரிவிக்காமல் தனது உரையினை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top