சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம்.
18 ஆண்டுகளாக ஆமை நடை போட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.
நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.
இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Read more: http://www.truetamilan.com/2014/10/1_13.html#ixzz3G3U9g3rA
0 comments:
Post a Comment