↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சிறைக்கு வந்ததில் இருந்து ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்றும் சசிகலா, இளவரசி தான் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுவதாகவும் கர்நாடக டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்திற்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நலமாக உள்ளார். சிறை சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் அவர்.
அவர் சிறைக்கு வந்ததில் இருந்து இதுவரை யாரையுமே சந்திக்கவில்லை. ஆனால் சசிகலா, இளவரசி ஆகியோர் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் வெளியில் இருந்து உணவு வாங்கி சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் கொடுக்கப்படும் பால், ரொட்டி ஆகியவற்றை சாப்பிடுகிறார்.
மேலும் இட்லி, பொங்கல் உள்ளிட்டவற்றை 2, 3 நாட்களுக்கு ஒரு முறை வரவழைத்தும் சாப்பிடுகிறார். அவர் தனக்கு சிறப்பு வசதியோ, சலுகைகளோ வேண்டும் என்று கேட்கவில்லை. பெண் அதிகாரி திவ்யஸ்ரீ ஜெயலலிதாவை கவனித்து வருகிறார் என்றார்.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» ஜெயலலிதா யாரையும் சந்திப்பது இல்லை, சசிகலா, இளவரசி தினமும் 5 பேரை சந்திக்கின்றனர்: கர்நாடக டி.ஐ.ஜி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment