↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த 'சவாலே சமாளி' உள்பட சுமார் பத்து படங்கள் வரை இயக்கிய பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மல்லியம் ராஜகோபால். தற்போது இவருடைய மகன் ராஜ்பரத் கோலிவுட்டில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

'நட்பதிகாரம் 79' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஜ்பரத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் தேஜஸ்வி என்ற தெலுங்கு நடிகை. இவர் ஏற்கனவே ராம்கோபால் வர்மாவின் 'ஐஸ்க்ரீம்' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரபொஷனல் டான்சரான தேஜஸ்வி, இந்த படத்தில் ராஜபரத்துடன் இணைந்து 'ஷைலா ஓ ஷைலா' என்ற குத்துப்பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்து படக்குழுவினர்களே அசந்து போய்விட்டதாக கூறப்படுகிறது.

நட்பதிகாரம் 79' படத்தை இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த 'மஜ்னு' உள்பட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாரீஸ் ஜெயராஜ் முதலில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படமும் மஜ்னுதான். ஆனால் கவுதம் மேனன் இயக்கிய 'மின்னலே' இந்த படத்திற்கு முன்னர் வெளிவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரொமான்ஸ் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த படத்தில் அம்ஜத்கான் - ரேஷ்மி மேனன் ஜோடியும் நடிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top