↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'மாஸ்' திரைப்படத்தின் டீசர் நேற்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் டீசரை மிக ஆவலுடன் நேற்று முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நேற்று மாலை வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் டீசர் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

'மாஸ் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் படத்தின் டீசர் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடந்து வருகின்றது என்றும், தங்களது முழு கவனமும் படத்தை முடிப்பதில் உள்ளது என்றும் இருப்பினும் டீசரை விரைவில் வெளியிட உள்ளதாகவும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், பார்த்திபன், உள்பட பலர் நடித்துள்ள 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது VFX பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாகவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top