தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் “ காக்கா முட்டை” படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை பெற்றுவருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. தொடர்ந்து சென்னை திரைப்பட திருவிழாவிலும் திரையிடப்பட்டது. சிறந்த சிறார்கள் திரைப்படமாக தேசிய விருதினையும் பெற்றது. தற்பொழுது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது மற்றும் பார்வையாளர்கள் தேர்வு என்று மூன்று விருதுகளை நாடு கடந்து அள்ளி வந்திருக்கிறது. இதனால் படக்குழுவே மகிழ்ச்சியில் உள்ளது. படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய திரைப்பட விழாவில் விருது வென்றதற்காக நான் மிகவும் பெருமையடைகிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.
இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி அவர்களுக்கான வாழ்வியல் சூழ்நிலையில் உருவான கதைத் தளமே ’காக்கா முட்டை’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment