↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுதளத்தில் அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால், பல இணையதள உரிமையாளர்கள் வருமான இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search Engine) தளத்தில் இன்று முதல் (21.04.15) அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதாவது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவ்வகையான போன்களுக்கு மட்டும் பொருந்துமாறு கூகுள் தேடுதளத்தை புதிதாக மேம்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ஸ்மார்ட்போன் பிரவுசர் (Browser) வசதிகளை பொருத்தே இணையதளங்களும் செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இணையதளங்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
கூகுளின் இந்த அதிரடி மாற்றத்தால், இணையதள நிறுவனங்களின் தரவரிசை மதிப்பீடு (Google Ranking) பாதிக்கப்படுவதோடு, அந்த நிறுவனங்களுக்கு பெருமளவில் வருமான இழப்பும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, இந்த புதிய மாற்றமானது ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆங்கிலம் தவிர்த்து பிற உள்நாட்டு மொழிகளை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவும் உலகளவில் உள்ள இணையதள உரிமையாளர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.
Duda என்ற தனியார் வலைத்தள வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த Itai Sadan என்ற வல்லுனர் கூறுகையில், கூகுளின் இந்த அதிரடி மாற்றத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகளை பெரும் நிறுவனங்கள் இன்னும் உணராமலே உள்ளன.
இந்த மாற்றத்தால், இணையதளங்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைய வாய்ப்பு உள்ளதால், இணையத்தளம் மூலமாக செயல்படும் லட்சக்கணக்கான வலைத்தளங்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு சிறந்த பிரவ்சிங் (Browsing) அனுபவத்தை வழங்கவே இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னால், கூகுள் இயங்குதளமான ஆன்டிராய்டு (Android) சேவையை மட்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என கூகுள் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஐ.நா கமிஷன் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top