↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவான போராட்டம் இந்திய இணையத்தில் தீவிரமாகி உள்ளது. இணைய சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான விவாதம் தீவிரமாகி உள்ள நிலையில், குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்கும் ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டமும் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த திட்டம் பொது நலன் நோக்கிலானது என்று ஃபேஸ்புக் கூறி வந்தாலும், இணைய சமநிலை விவாதத்தில் இந்த திட்டம் கடுமையாக விமர்சனத்திற்கு இலக்காகி உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தில் கைகோர்ந்திருந்த நிறுவனங்கள் பல இணைய சமநிலைக்கு ஆதரவாக இதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் சர்ச்சைக்குறிய இந்த முயற்சி பற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், இணைய சமநிலைக்கு இண்டெர்நெட் ஆர்க் திட்டம் எதிரானது அல்ல என்றும், மேலும் இணைய சமநிலைக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் எந்த குறிப்பிட்ட இணையதளத்தையும் முடக்கவோ அதிவேக இணையத்தை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை என்றும், உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணையம் உருவாக்கித்தரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பலரும் ஜக்கர்பர்கின் விளக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் அவரிடம் இண்டெர்ண்ட்.ஆர்க் திட்டம் தொடர்பாக காரசாரமான கேள்விகளை கேட்டுள்ளனர்.
இதில் ரித்தேஷ் பாண்டியா என்பவர், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இணையத்தை சாத்தியமாகுவது நல்ல விடயமாக இருந்தாலும், முழு இணையத்தையும் வழங்காமல் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் வழங்குவது ஏன் என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜக்கர்பர்க், முழு இணையத்தையும் இலவசமாக வழங்குவது கட்டுப்படியாகாது என்றும், தொலைதொடர்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் டொலர்களை கொட்டியிருப்பதால் இலவச இணைடெர்நெட் அவற்றை திவாலாக்கிவிடும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜர்க்கர்பர்கின் விளக்கம் : https://www.facebook.com/zuck/posts/10102033678947881

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top