↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 96 ஓட்டங்களை அடித்தார். இதன் மூலம் இந்த புதிய சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.
இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2 ஆயிரத்து 804 ஓட்டங்களை கெய்ல் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 155 ஆகும். மேலும் 199 சிக்சர் விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.
புனே அணிக்கு எதிராக 66 பந்துகளில் கெய்ல் 175 ஓட்டங்களை அடித்து சாதனை படைத்தார். இதுதான் ஐபிஎல். வரலாற்றில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
அதோடு கிறிஸ் கெயில் நேற்று அடித்த 96 ஓட்டங்களை இன்று பிறந்தநாள் காணும் தனது தாயாருக்கு அர்ப்பணித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top