Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன.
இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
* உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும்.
* ஆப் நோட்டிபிகேஷன் (App notification) சென்று எந்த அப்ளிகேஷன்கள் (APP) நோட்டிபிகேஷன் மூலம் உங்களை தொந்தரவு செய்யும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* ஆப்ஸ் செட்டிங்ஸ்க்கு (App settings) ஏற்ப லாக் ஸ்கிரீனிலும் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.
* நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் போனை வழங்கும் போது கெஸ்டு மோடு (Guest mode) பயன்படுத்தலாம்.
* Do not disturb என்ற ஓப்ஸன் (Option) மூலம் இரவு நேரங்களில் பயனாளிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க ஆன்டிராய்டு 5.0 அனுமதிக்கின்றது.
* ஸ்மார்ட்வாட்ச் (Smart watch) முதல் ஸ்மார்ட் டிவி (Smart TV) வரை அனைத்து கருவிகளுடனும் புதிய அப்டேட் மூலம் இணைக்க முடியும்.
* தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட் மூலம் பேட்டரி பயன்பாடு அதிகமாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment